ரஜினிகாந்த் 75 வது பிறந்த தினம்.

by Admin / 12-12-2025 10:55:26am
 ரஜினிகாந்த் 75 வது பிறந்த தினம்.

தமிழ் திரை உலகில் கடந்த 50 ஆண்டுகாலம் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்தின் பிறந்தநாள் இன்று. பல்வேறு விருதுகளை பெற்ற அவர் திரைப்பயணம் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. இவரது பிறந்த நாளை இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து பாராட்டியுள்ளனர். தொடர்ந்து பல்வேறு பிரபலங்கள் ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை சொல்லி வருகிறார்கள்

.1950 ஆம் ஆண்டு டிசம்பர் பனிரெண்டாம் தேதி பெங்களூரில் பிறந்த ரஜினிகாந்த்திற்கு இப்பொழுது 75 வது பிறந்த தினம். அவரது பிறந்த நாளை ரசிகர்களும் மிக உற்சாகத்தோடு கொண்டாடி வருகின்றனர். அவரைப் பாராட்டும் முகமாக அவர் நடித்த படையப்பா திரைப்படம் திரையரங்குகளில் மறு வெளியீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

 

Tags :

Share via