கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

ஈரோடு மாவட்டத்தில் சமீப காலமாக தமிழகம் முழுவதும் பத்துக்கும் மேற்பட்ட தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தினர் சமூக விரோதிகளால் படுகொலை செய்யப்பட்டனர். இதனை கண்டித்து தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ஈரோடு வீரப்பன் சத்திரம் பேருந்து நிறுத்தத்தில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அக்கட்சியின் ஈரோடு மாவட்ட செயலாளர் மயில்துறையன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் இச் சமுதாயத்தினருக்கு எதிராக நடைபெறும் குற்ற சம்பவங்களை தமிழக அரசு உடனடியாக தடுக்க வலியுறுத்தியும் தொடர்ந்து இது போன்ற கொலை குற்ற சம்பவங்களை தமிழக அரசு முன்கூட்டியே தடுக்க வலியுறுத்தியும் கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாவட்டத் தலைவர் செல்வராஜ் மற்றும் மாவட்ட நகர பேரூர் கழக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Tags :