இந்தியா- கனடா இடையே2030-ம் ஆண்டிற்குள் 50 பில்லியன் டாலராக உயர்த்த இலக்குகள் நிர்ணிக்கப்பட்டுள்ளது.

by Admin / 03-03-2026 12:15:23am
இந்தியா- கனடா இடையே2030-ம் ஆண்டிற்குள் 50 பில்லியன் டாலராக உயர்த்த இலக்குகள் நிர்ணிக்கப்பட்டுள்ளது.

புது தில்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் கனடா பிரதமர் மார்க் கார்னி சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினர் இ சந்திப்பின் போது இரு நாடுகளுக்கும் இடையேயான முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. இந்தியாவின் சிவில் அணுசக்தி திட்டத்திற்காக சுமார் 2.6 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான யுரேனியத்தை நீண்ட கால அடிப்படையில் வழங்க கனடா ஒப்புக் கொண்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தமான விரிவான பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தத்தை 2026 ஆம் ஆண்டின் இறுதிக்குள் முடிக்க இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர் ..இரு தரப்பு வர்த்தகத்தை 2030ம் ஆண்டிற்குள் 50 பில்லியன் டாலராக உயர்த்த இலக்குகள் நிர்ணிக்கப்பட்டுள்ளது. முக்கியமான தாதுக்கள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, கலாச்சாரம் ,பாதுகாப்பு ,கல்வி மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்தியா- கனடா இடையே ஒரு கட்டமைக்கப்பட்ட பாதுகாப்பு பேச்சு வார்த்தையை தொடங்கவும் கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரிக்கும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தியா- கனடா இடையே2030-ம் ஆண்டிற்குள் 50 பில்லியன் டாலராக உயர்த்த இலக்குகள் நிர்ணிக்கப்பட்டுள்ளது.
 

Tags :

Share via

More stories