இந்திய மாணவர்கள் ஐந்து தங்கப் பதக்கங்களை வென்று உலக அளவில் முதலிடத்தை பிடித்தனர்.
இந்தியா-இங்கிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், 2026 ஜூலை 15, புதன்கிழமை அன்று நடைமுறைக்கு வந்தது.
மத்திய அமைச்சர்கள் எஸ். ஜெய்சங்கர் மற்றும் பியூஷ் கோயல் ஆகியோர் பிரஸ்ஸல்ஸில் மூன்றாவது இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக மற்றும் தொழில்நுட்ப கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்பு
ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் கப்பல்களில் இந்திய மாலுமிகளைப் பணியமர்த்துவதிலிருந்து ஆட்சேர்ப்பு முகவர் நிறுவனங்களுக்கும் கப்பல் உரிமையாளர்களுக்கும் மறு அறிவிப்பு வரும் வரை இந்திய கப்பல் போக்குவரத்து இயக்குநரகம் தடை.
ரஷ்ய எண்ணெயை வாங்கும் நாடுகள் மீது 100% சுங்கவரி விதிக்கக் கோரும் முன்மொழியப்பட்ட அமெரிக்க மசோதா தொடர்பாக உள்நாட்டில் அரசியல் விவாதங்கள் வெடித்துள்ளன
புது தில்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் லடாக்கைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக், காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். தேசிய தேர்வு சீர்திருத்தங்களுக்கு எதிராக கரப்பான்பூச்சி ஜனதா கட்சியுடன் இணைந்து போராட்டம் நடத்தி வரும் அவரது உடல் எடை 9 கிலோவை நெருங்கியுள்ள நிலையில், அரசியல் தலைவர்கள் உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ளுமாறு அவரை வலியுறுத்தியுள்ளனர். கட்டாய மருத்துவ சிகிச்சை கோரி தில்லி உயர் நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
என்.டி.ஏ வினாத்தாள் தயாரித்த ஒருவரின் கைப்பேசியில் இருந்த 132 கையெழுத்து வேதியியல் கேள்விகள். இதில், 111 கேள்விகள் முதன்மைத் தொகுப்புகளுடன் பொருந்தியிருந்ததை சிபிஐ கண்டறிந்தது
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடருக்கு முன்னதாக , அமைப்பு ரீதியான மாற்றங்கள் மற்றும் சர்ச்சைக்குரிய தொகுதி மறுவரையறை மசோதா குறித்து வியூகம் வகுப்பதற்காக, பாஜகவின் மூத்த தலைவர்கள் பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்தில் ஆலோசனை கூட்டத்தை நடத்தினர்.
மழைப் பள்ளம் இமயமலை அடிவாரத்தை நோக்கி நகர்வதால், பருவமழை ஒர்.அமைதியான கட்டத்திற்குள் நுழைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம்தெரிவித்துள்ளது
.டெல்லி அரசு காலை மற்றும் மாலை நெரிசல் நேரங்களில் மட்டும் பிரத்தியேகமாக இயங்கும் 56 பெண்கள் மட்டுமே பயணிக்கும் மின்சாரப் பேருந்து சேவைகளைத் தொடங்குவதற்கான திட்டங்களை இறுதி செய்துள்ளது.
கொலம்பியாவில் நடைபெற்ற 56-வது சர்வதேச இயற்பியல் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய மாணவர்கள் ஐந்து தங்கப் பதக்கங்களை வென்று உலக அளவில் முதலிடத்தை பிடித்தனர்.
Tags :


















