ஒதுங்கிய மழை ஊரெங்கும் தலைதூக்கிய பனி மூட்டம்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். இந்தியப் பெருங்கடல் மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று (சனிக்கிழமை) தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்,தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் பரவலாக காணப்பட்டது.
Tags : ஒதுங்கிய மழை ஊரெங்கும் தலைதூக்கிய பனி மூட்டம்.