இல்லம் செல்வோம்... உள்ளம் வெல்வோம்... அண்ணாமலை

by Editor / 03-10-2021 12:12:41pm
இல்லம் செல்வோம்... உள்ளம் வெல்வோம்...  அண்ணாமலை

இல்லம் செல்வோம்; உள்ளம் வெல்வோம் என்ற தலைப்பில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை புதிய பரப்புரை பயணத்தை தொடங்கி வைத்துள்ளார்.

இதன் மூலம் எதிர்வரும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக கணிசமான இடங்களில் பதவியில் அமர வேண்டும் என எண்ணுகிறார் அண்ணாமலை. அப்போது தான் கட்சியின் அடிமட்டம் வலிமைபெறும் என அவர் நம்புகிறார்.

தமிழகத்தில் வரும் ஜனவரி மாதம் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதற்குள்ளாக இல்லம் செல்வோம்; உள்ளம் வெல்வோம் திட்டத்தை பரவலாக செயல்படுத்தி முடிக்கவுள்ளார் அவர்.

 

Tags :

Share via