அரசு விரைவு பஸ்களில் 50% கட்டண சலுகை

by Editor / 20-04-2023 08:08:43am
அரசு விரைவு பஸ்களில் 50% கட்டண சலுகை

தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேரூந்துகளில் மாதத்திற்கு  5 முறைக்கு மேல் பயணம் செய்யும் பயணிகளுக்கு அடுத்து வரும் ஒவ்வொரு பயணித்திலும் 50 சதவீத கட்டண சலுகை வழங்கப்படும் என அத்துறையின் அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார். இந்நிலையில், 50 சதவீத கட்டண சலுகை திட்டம் மே 1-ந் தேதி முதல் தொடங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இதற்கான சாப்ட்வேர் பொறுத்தும் பணி நடந்துவருகிறது. இந்த சலுகை தமிழ்நாடு அரசு விரைவு பேரூந்துகளுக்கும் பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via