2,708 க்கும் மேற்பட்ட உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதாக கூறிவிட்டு வெறும் ஐந்து பேரை மட்டுமே நியமித்து திமுக அரசு

by Admin / 19-03-2026 01:24:34am
2,708 க்கும் மேற்பட்ட உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதாக கூறிவிட்டு  வெறும் ஐந்து பேரை மட்டுமே  நியமித்து திமுக அரசு

தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2,708 க்கும் மேற்பட்ட உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதாக கூறிவிட்டு கடந்த ஐந்து ஆண்டுகளில் வெறும் ஐந்து பேரை மட்டுமே நிரந்தரமாக நியமித்து திமுக அரசு அரசியல் நாடகம் ஆடுவதாக பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார். 2078 உதவி பேராசிரியர்களின் நியமிக்க போவதாக திருவிழா போல அறிவிப்பை வெளியிட்ட திமுக அரசு தனது ஐந்தாண்டு கால ஆட்சியில் பெரும் ஐந்து பேரை மட்டுமே நியமித்துள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அரசு கல்லூரிகளில் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும் இதனால் உயர்கல்வித்துறை சீரழிந்து வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார் .உதவி பேராசிரியர் நியமனத்திற்கான சான்றிதழ் சரிபார்ப்பு மார்ச் 11 இல் இருந்து மார்ச் 23 க்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதோடு நேர்காணல் மார்ச் 24 க்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும் தேர்வு எழுதியவர்களில் ஒரு குறிப்பிட்ட சிலருக்கு அவசர அவசரமாக பணி நியமன ஆணைகளை வழங்குபடுவதாக தேர்வர்கள் மத்தியில் அதிருப்தி நிலவுகிறது .நிரந்தர பேராசிரியர்களின் நியமிக்க தவறியதால் சுமார் 10,000 மேற்பட்ட கௌரவவிாிவுரையாளர்களைக்  கொண்டு அரசு கல்லூரிகள் இயக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டி உள்ளார். ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2025 ல் அறிவிக்கப்பட்ட 2708 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் தற்போது படிப்படியாக வெளியிடப்பட்டு வருகின்றன .இந்த கல்வி ஆண்டில்இறுதிக் கொள் அனைத்து நியமனங்களும் நிறைவடையும் என்று உயர் கல்வித் துறையை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories