பி எம் ஸ்ரீ திட்டத்தை உடனடியாக தமிழக அரசு செயல்படுத்த வேண்டும்
பி எம் ஸ்ரீ திட்டத்தை உடனடியாக தமிழக அரசு செயல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு தலைமைச் செயலாளருக்கு கடிதம் அனுப்பி உள்ளது. திமுக தலைமையிலான அரசு திட்டத்தில் சேர மறுத்ததால் மத்திய அரசு பள்ளி கல்வி நிதியில் சுமார் 3,500 கோடியே நிறுத்தி வைத்துள்ளது தேர்தலில் தமிழக வெற்றிக்கலகம் வெற்றி பெற்று இருப்பதால் கொள்கை சுகமாக செயல்படுத்தப்படும் என மத்திய அரசு நம்பிக்கை கொண்டுள்ளது இருப்பினும் இக்குழு குறித்த புதிய அரசின் குறிப்பிட்ட நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்று தெரியவில்லை மாநில அரசுக்கு மத்திய அரசுக்கும் இடையிலான இந்த கொள்கை கருத்து வேறுபாடுகளாலே தாமதமாகின்றன. தேசிய கல்விக் கொள்கை புரிந்துணர்வு ஒப்பந்தம் மாநிலங்கள் தேசிய கல்விக் கொள்கையை முழுமையாக செயல்படுத்த வேண்டும் எனக் கூறுகிறது தமிழ்நாடு வரலாற்று ரீதியான இதன் சில பகுதிகளை குறிப்பாக முன்மொழி கொள்கையை எதிர்த்து வந்துள்ளது மாநில அரசு அதிகாரிகள் மத்திய அரசின் அனைத்து ஆணைகளையும் பின்பற்றுவதற்கு பதிலாக மாநில தலைமையிலான குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் மட்டுமே பள்ளிகளை ஏற்றுக்கொள்வதாக கூறி வந்தனர் இத்திட்டமானது 14,500 க்கும் மேற்பட்ட பள்ளிகளை தேசிய கல்விக் கொள்கை 2020 இன் இலக்குகளை எடுத்துக்காட்டும் மாதிரி நிறுவனங்களாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது திறன் மிக வகுப்பறைகள் நவீன ஆய்வகங்கள் தொழிற்பயிற்சி மற்றும் பசுமை பள்ளி முன்னெடுப்புகள் ஆகியவை இதில் அடங்கும். ஒட்டுமொத்த பிராந்திய கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்காக இந்த பள்ளிகள் அருகில் உள்ள பிற அரசு பள்ளிகளுக்கு வழிகாட்டும் நோக்கம் கொண்டவையாக இருக்கும் என்றும் பொதுவாக மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே 60க்கு 40 என்ற விகிதத்தில் பிரிக்கப்பட்டு செயல்படுத்தப்பட வேண்டும் என்பது இத்திட்டத்தின் நோக்கமாகும்.. திமுக அரசு, தமிழ்நாட்டில் இரு மொழி திட்டம் தான் நடைமுறையில் உள்ளது என்றும் மும்மொழி திட்டத்தின் மூலமாக மத்திய அரசு இந்தியை திணிக்கிறது என்கிற கருத்தை முன்வைத்து இதை நடைமுறைப்படுத்தாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.
Tags :


















