ஜார்க்கண்ட் மாநில சட்டப் பேர வைக்கு முதல் கட்டமாக இன்று 43 தொகுதிகளில் வாக்குப்பதிவு 

by Editor / 13-11-2024 08:50:05am
ஜார்க்கண்ட் மாநில சட்டப் பேர வைக்கு முதல் கட்டமாக இன்று 43 தொகுதிகளில் வாக்குப்பதிவு 

ஜார்கண்ட் மாநிலத்தில் 81 இடங்களை கொண்ட சட்டசபைக்கு நவம்பர் 13 மற்றும் 20-ந்தேதி என இருகட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்தது.முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் 43 தொகுதிகளுக்கான தேர்தல் பிரசாரம் நேற்று முன்தினம் மாலையுடன் முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் கமிஷன் தீவிரப்படுத்தியது.

முதல் கட்டமாக 43 சட்டசபை தொகுதிகளுக்கு இன்று (புதன்கிழமை) வாக்குப்பதிவு நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கும். மாலை 5 மணிக்கு முடிவடையும். முதல்கட்ட தேர்தல் நடைபெறும் 43 தொகுதிகளில் மொத்தம் 685 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

இந்த தேர்தலுடன் கேரள மாநிலம் வயநாடு நாடாளுமன்ற தொகுதியின் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவும் இன்று நடக்கிறது. ராகுல் காந்தி ராஜினாமா செய்ததால் நடைபெறும் இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் பிரியங்காவும், இடதுசாரி கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பி சத்யன் மெகோரியும், பா.ஜனதா சார்பில் நவ்யா அரிதாஸ் ஆகியோரும் போட்டியிடுகிறார்கள். இதேபோல் மத்தியபிரதேச மாநிலம் விஜய்பூர், புத்தினி சட்டசபை தொகுதிகளுக்கும் இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

 

Tags : ஜார்க்கண்ட் மாநில சட்டப் பேர வைக்கு முதல் கட்டமாக இன்று 43 தொகுதிகளில் வாக்குப்பதிவு 

Share via