செல்போன் பறிப்பு 2 பேரை கைது செய்த போலீஸ்

by Staff / 29-03-2022 04:56:56pm
செல்போன் பறிப்பு  2 பேரை கைது செய்த போலீஸ்

சென்னை திருவொற்றியூர் பகுதியில் வசிக்கும் தங்கச்செல்வம் என்பவர் சில தினங்களுக்கு முன்பு திருவொற்றியூர் அஜாக்ஸ் பேருந்து நிலையம் அருகே நின்று கொண்டிருந்த போது அவ்வழியாக ஆட்டோவில் வந்த 2 பேர் பேருந்து நிலையத்தின் பின்புறம் உள்ள பகுதியின் அட்ரஸை கேட்டு விசாரித்துள்ளனர்.

பின்னர் தங்களது ஆட்டோவிலேயே வந்து வழியை காட்டுமாறும் வற்புறுத்தி உள்ளனர். இதனை தொடர்ந்து தங்கச்செல்வம் தன் வீட்டிற்கு செல்லும் வழி என்பதால் ஆட்டோவில் சென்று வழியை காட்டியுள்ளார். 

பின்னர் தனது வீடு வந்தவுடன் தங்கச்செல்வம் ஆட்டோவிலிருந்து இறங்கி கொண்டு வீட்டிற்கு நடந்து செல்லும்பொழுது தனது கைப்பையில் இருந்த செல்போன் திருடு போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இச்சம்பவத்தை தொடர்ந்து திருவொற்றியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் புகாரின் அடிப்படையில் திருவொற்றியூர் காவல் நிலைய குற்ற பிரிவு ஆய்வாளர் தலைமையில் வழக்கு பதிவு செய்து குற்றவாளியை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில் தண்டையார்பேட்டை பகுதியைச் சார்ந்த பாலாஜி என்பவரையும் ராஜாஜி நகர் பகுதியைச் சார்ந்த ரமேஷ் என்பவரையும் கைது செய்து நிலையம் அழைத்து வந்து விசாரணையில் ஈடுபட்ட பொழுது இதுபோன்று வடசென்னையில்  பல்வேறு இடங்களில் செல்போன் திருடியது தெரியவந்துள்ளது.

மேலும் வயதானவர்களை குறிவைத்து அவர்களின் கவனத்தை திசை திருப்பி அவர்கள் செல்லக்கூடிய வழியில் அட்ரஸ் கேட்பது போன்று நடித்து அவர்களையும் ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு செல்லும் வழியில் செல்போனை திருடியவுடன் ஆட்டோவில் இருந்து இறக்கி விட்டு விட்டு அங்கிருந்து தப்பிச் செல்வதை வழக்கமாக கொண்டு உள்ளது தெரிய வந்தது. 

இதனைத் தொடர்ந்து பாலாஜி மற்றும் ரமேஷை கைது செய்து அவர்களிடம் இருந்த 3 செல்போன் மற்றும் ஆட்டோ ஒன்றையும் பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 

Tags :

Share via