இயக்குநர் பாரதிராஜாவை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்

by Editor / 10-09-2022 01:25:29pm
இயக்குநர் பாரதிராஜாவை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்

திரைப்பட இயக்குநர் பாரதிராஜா உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இல்லம் திரும்பியதையொட்டி இன்று நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று சந்தித்து, உடல்நலம் விசாரித்தார். திரைப்பட இயக்குநர் பாரதிராஜா உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது பாரதிராஜா நலம் பெற்று இல்லம் திரும்பினார். இதனையடுத்து இன்று முதலமைச்சர் பாரதிராஜாவை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, கவிப்பேரரசு வைரமுத்து மற்றும் பாரதிராஜாவின் மகன் மனோஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

 

Tags :

Share via