பூட்டிய காருக்குள் அழுகிய நிலையில் ஆண் நபர் ஒருவரின் சடலம் மீட்பு

by Editor / 10-09-2022 01:22:27pm
பூட்டிய காருக்குள் அழுகிய நிலையில் ஆண் நபர் ஒருவரின் சடலம் மீட்பு

தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகே பூட்டிய காருக்குள் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்கப்பட்டு உள்ள நிலையில் இதுகுறித்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். தஞ்சை பேருந்து நிலையம் வாகன நிறுத்துமிடத்தில் இருந்த காரில் வாய் மூக்கில் ரத்தம் வழிந்து நபரின் சடலம் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு தடவியல் நிபுணர் குழுவினருடன் விரைந்த போலீசார் காரில் இருந்த சடலத்தை மீட்டு விசாரணை முன்னெடுத்தனர். காரின் அருகே இருந்த பிளாஸ்டிக் பையில் சட்டை மற்றும் வேஷ்டி செல்போன் இருந்தது அதை கைப்பற்றி செல்போன் எண்ணிற்கு கடைசியாக வந்த அழைத்துக்கொண்டு போலீசார் விசாரித்ததில் தஞ்சை மாவட்ட பாப்பாநாடு பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பது தெரியவந்தது.

 

Tags :

Share via

More stories

Logo