ஈரான் மீது கை வைக்காதீர்கள்.. அமெரிக்காவுக்கு ரஷ்யா பகிரங்க எச்சரிக்கை
ஈரான்-இஸ்ரேல் மோதல் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்காவை ரஷ்யா எச்சரித்துள்ளது. தேவையில்லாமல் ஈரானை தாக்குவதாலோ அல்லது இஸ்ரேலுக்கு நேரடி ராணுவ உதவி வழங்குவதாலோ ஏற்படும் விளைவுகள் கடுமையாக இருக்கும் என்று ரஷ்ய துணை வெளியுறவு அமைச்சர் செர்ஜி ரியாப்கோவ் கூறியுள்ளார். தற்போதைய சூழ்நிலையில் அமைதி சாத்தியம் என்றும், பிரச்சனையை ராஜதந்திர ரீதியாக தீர்க்க முடியும் என்றும் புதின் கூறியதாக ரியாப்கோவ் தெரிவித்துள்ளார்.
Tags :



















