ஆயத்த ஆடை உற்பத்தியில் தமிழ்நாடு முதலிடம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ஆயத்த ஆடை உற்பத்தியில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெறும் இயந்திரக் கண்காட்சியில் பேசிய அவர், திமுக ஆட்சியில் தொழிற்துறை பெரும் வளர்ச்சி கண்டுள்ளது. தமிழ்நாடு மீது உலக நாடுகள் நம்பிக்கை கொண்டுள்ளன. தொழிற்சாலைகளில் பெண் தொழிலாளர்கள் அதிகளவில் பணிபுரியும் மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தமிழ்நாடு 11 சதவிகிதம் பங்களிப்பு அளிக்கிறது என தெரிவித்தார்.
Tags :