சுங்க கட்டணத்தை ரூ.1,500 ஆக குறைக்க வேண்டும்

by Editor / 19-06-2025 12:00:55pm
சுங்க கட்டணத்தை ரூ.1,500 ஆக குறைக்க வேண்டும்

தனியார் வாகனங்களுக்கு 'ஃபாஸ்டேக்' அடிப்படையில் ரூ.3,000க்கு வருடாந்திர சுங்க கட்டண பாஸ் திட்டத்தை அறிமுகம் செய்ய உள்ளதாக மத்திய அரசு அறிவித்தது. இந்நிலையில், தனியார் வாகனங்கள் சுங்க சாவடியை பயன்படுத்துவது குறைவாக உள்ளதால் இந்த கட்டணம் ஏற்புடையதல்ல என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். மேலும், இந்த கட்டணத்தை ரூ.1,500 ஆக குறைக்கலாம் என்றும், சரக்கு வாகனங்களுக்கு ரூ.3,000 கட்டணம் விதிக்கலாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

 

Tags :

Share via

More stories