முன்னாள் அமைச்சர் காமராஜ்க்கு சொந்தமான 49 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

by Editor / 08-07-2022 08:21:24am
முன்னாள் அமைச்சர் காமராஜ்க்கு  சொந்தமான 49 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் வருமானத்திற்கு அதிகமான அளவில் சொத்து சேர்த்தது தொடர்பாக கிடைக்கபெற்ற தகவலைத் தொடர்ந்து  அவருக்கு சொந்தமான 49 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள்  சோதனை நடத்தி வருகின்றனர். மன்னார்குடியில் உள்ளவீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். மேலும் காமராஜ் உறவினர், நண்பர் வீடுகளிலும்  நடக்கிறது.இதில் 100க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். அதிகாலை 5 மணி முதல் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

 

Tags : Anti-corruption department raids 49 places belonging to former minister Kamaraj

Share via