பூஜ்ஜியம் பர்சன்டைல் பற்றிய புரிதல் முதலில் அவசியம் - தமிழிசை

by Staff / 21-09-2023 02:00:37pm
பூஜ்ஜியம் பர்சன்டைல் பற்றிய புரிதல் முதலில் அவசியம் - தமிழிசை

மருத்துவ முதுநிலை படிப்புகளில் சேர்வதற்கான நீட் தேர்வில் "பூஜ்ஜியம்" மதிப்பெண்கள் எடுத்திருந்தாலும் அவர்களுக்கு கல்லூரியில் சேர இடம் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளதை போல தவறாக விமர்சிப்பவர்களுக்கு நீட் தேர்வு கட் ஆப் மதிப்பெண், பூஜ்ஜியம் பர்சன்டைல் என்றால் என்ன? என்பதை பற்றிய புரிதல் முதலில் அவசியம் என்று தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். இது பற்றி ட்வீ செய்துள்ள அவர், நீட் தேர்வை பற்றிய புரிதல் இன்றி நீட் தேர்வை ஒழிப்பதாக கூறிக் கொண்டிருப்பவர்களுக்கு இதைப் பற்றிய புரிதல் இல்லாதது ஒன்றும் ஆச்சரியமல்ல? என குறிப்பிட்டுள்ளார்.

 

Tags :

Share via

More stories