குவைத் தீபத்தில் பலியான  31 உடல்கள்  தனி விமான மூலம்கொச்சி வருகிறது.அமைச்சர் விரைவு.

by Editor / 14-06-2024 10:14:56am
குவைத் தீபத்தில் பலியான  31 உடல்கள்  தனி விமான மூலம்கொச்சி வருகிறது.அமைச்சர் விரைவு.

குவைத்தில் ஏற்பட்ட கோர தீபத்தில் 49க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பலியானார், தமிழ்நாட்டை சேர்ந்த ஏழு பேரின் உடல்களும், கேரளாவை சேர்ந்த 23   உடல்களும் கர்நாடகவை சேர்ந்த ஒருவரின் உடலும்  என மொத்தம் 31 உடல்கள்  தனி விமான மூலம் இன்று காலை 10 மணியளவில்   கொச்சி நெடுமாஞ்சேரி விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட உள்ளது, இங்கிருந்து அவர்களின் சொந்த ஊருக்கு தனி ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட உள்ளது.

குவைத் நாட்டின் தெற்கு அஹ்மதி அருகே மங்காஃப் பகுதியில் உள்ள 7 அடுக்குமாடி குடியிருப்பில் ஏராளமான தொழிலாளர்கள் தங்கி பணியாற்றி வந்தனர்.  இந்நிலையில்  13ம் தேதி அதிகாலை 4 மணியளவில் அக்கட்டடத்தில் திடீரென தீப்பற்றியுள்ளது.  இந்த தீ மளமளவென பரவி கட்டடம் முழுவதும் பரவியது. தீ விபத்தில் உயிரிழந்த இந்தியர்கள் உடல் கேரள மாநிலம் கொச்சின் கொண்டு 
வரப்படும் நிலையில் விபத்தில் உயிரிழந்த 7 தமிழர்களின் உடல்களை மீட்டு உறவினர்களிடம் ஒப்படைக்க வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கொச்சி செல்லும் முன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை
சந்தித்தார்.அப்போது பேசியஅவர் தெரிவித்ததாவது.

“ குவைத் நாட்டில் உள்ள அடுக்குமாடி கட்டடத்தில் இரவு நேரத்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த 7 பேர் உயிரிழந்தனர்.  தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். உயிரிழந்தவர்கள் உடலை மீட்டு உறவினர்களிடம் விரைந்து ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.

உயிரிழந்தவர்களின் உடலுக்கு முதலமைச்சர் ரூபாய் 5 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார். இன்று காலை 9 மணிக்கு மேல் உயிரிழந்தவர்கள் உடல் கொச்சி வந்தடையும். கொச்சியிலிருந்து தனித்தனி வாகனம் மூலம் உயிரிழந்தவர்களின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது” என செஞ்சி மஸ்தான் தெரிவித்தார்.

 

Tags :

Share via