ஆர்.எஸ்.எஸ்.கொள்கை பரப்பு செயலாளராக தமிழக ஆளுநர் செயல்படுகிறார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

by Editor / 12-06-2022 02:37:22pm
ஆர்.எஸ்.எஸ்.கொள்கை பரப்பு செயலாளராக தமிழக ஆளுநர் செயல்படுகிறார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

ஆர்.எஸ்.எஸ்.கொள்கை பரப்பு செயலாளராக தமிழக ஆளுநர் செயல்படுகிறார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஆர்.எஸ்.எஸ் கொள்கைகளை பரப்பட்டும்.என கம்யூ கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் திருவாரூரில் செய்தியாளர் மத்தியில் தெரிவித்தார்.
 
மேலும் அவர் கூறுகையில்  மேட்டூர் அணை  எனதிறக்கப்பட்டு இதுவரை கடைமடை பகுதிகளுக்கு முழுமையாக தண்ணீர் செல்லவில்லை. பல இடங்களில் பாலம் கட்டும் பணி, தூர்வாரும் பணி நடைபெறுகிறது. அதனை அரசு விரைந்து முடித்து கடைமடை வரை தண்ணீர் செல்வதை உறுதிபடுத்த வேண்டும்.

நெல் கொள்முதலில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுகிறது. அதனை தடுக்க தனி விஜிலன்ஸ் குழுவை முதல்வர் அமைக்க வேண்டும்.

மாநிலங்களவை தேர்தலில் அதிகளவில் எதிர்கட்சிகள் அதிகளவில் வெற்றி பெற்றுள்ளது. குடியரசு தலைவர் தேர்தலில் இது பிரதிபலிக்கும். எதிர்கட்சிகள் 15 ம் தேதி ஒன்று சேர்ந்து கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ள நிலையில் மம்தா பானர்ஜி தனியாக கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளது தவறு.

விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6000 ரூபாய் வழங்கும் திட்டத்தில் பாஜகவின் துனை இல்லாமல் 145 கோடி ஊழல் நடைபெற வாய்ப்பே இல்லை.

சிதம்பரம் நடராஜர் கோயில் விவகாரத்தில் தமிழக அரசு நிதானமாக நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. தமிழக அரசு தனி சட்டம் இயற்றி சிதம்பரம் நடராஜர் கோயிலை அறநிலையத்துறை வசம் கொண்டு வர வேண்டும்.

இன்னும் சில காலத்தில் பாஜக உள்ளேயே மிகப் பெரிய பூகம்பம் வெடிக்கும். மோடியை மட்டும் முன்னிறுத்துவது பாஜகவில் ஒருமித்த கருத்தை கெடுக்கும். 

தேர்தல் வரும்போது எதிர்கட்சிகள் அனைத்தும் ஒன்றினையும்.

 

Tags :

Share via

More stories

Logo