காதலனை துரத்தி விட்டு சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம்- 2 வாலிபர்கள் கைது

by Admin / 23-07-2021 05:37:31pm
காதலனை துரத்தி விட்டு சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம்- 2 வாலிபர்கள் கைது



   
அரூர் அருகே காதலனை துரத்திவிட்டு சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தது தொடர்பாக 2 வாலிபர்களை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார கைது செய்தனர்.


தருமபுரி மாவட்டம் அரூர் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி பாபிசெட்டிபட்டி அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.இவரும் உறவினரான கிருஷ்ணகிரி மாவட்டம் பாவக்கல் பகுதியை சேர்ந்த ஆதிநாராயணன் மகன் அஜித் குமார் (வயது25) என்பவரும் கடந்த ஓராண்டாக காதலித்து வந்துள்ளனர்.இந்த நிலையில் கடந்த 5-ந் தேதி சிறுமியை பார்க்க வந்த அஜித்குமார் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியை தனியாக அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளாராம்.

இதனை நோட்டமிட்ட பெத்தூர் கிராமத்தை சேர்ந்த தீத்து மகன் விஜய்(26) மற்றும் தியாகு(36) ஆகியோர் அஜித்குமாரை மிரட்டி அங்கிருந்து துரத்தியுள்ளனர். பின்னர் விஜய், சிறுமியை மிரட்டி பலாத்காரம் செய்துள்ளாராம். அதனை தியாகு தனது செல்போனில் போட்டோ மற்றும் வீடியோ எடுத்துள்ளார்.இது குறித்து ‘‘வெளியே சொன்னால் கொலை செய்து விடுவோம்’’ என்று சிறுமிக்கு மிரட்டல் விடுத்துள்ளனர்.

இந்த நிலையில் சிறுமிக்கு நடந்த சம்பவம் அவரது தந்தைக்கு தெரிய வந்தது. இதுகுறித்து சிறுமியிடம் கேட்டுள்ளார்.இதனால் மனமுடைந்த சிறுமி நேற்று முன்தினம் இரவு தூக்கிட்டு தற்கொலை செய்ய முயன்றுள்ளார். அப்போது சிறுமியின் தாய் காப்பாற்றி விசாரித்துள்ளார். இதனால் தனக்கு நடந்த பாலியல் கொடூரம் குறித்து சிறுமி தனது தாயிடம் தெரிவித்தார்.இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய் அரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.அதன்பேரில் மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து பெத்தூரை சேர்ந்த விஜய், தியாகு ஆகிய இருவரையும் போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள காதலன் அஜீத்குமாரை தேடி வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories