தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கடுமையாக்கப்பட வேண்டும் - விக்ரமராஜா சாடல்

by Editor / 09-02-2025 11:36:13pm
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கடுமையாக்கப்பட வேண்டும் - விக்ரமராஜா சாடல்

மத்திய அரசு பட்ஜெட்டால் சாமானியர்கள் உட்பட யாருக்கும் பிரயோஜனம் இல்லை எனவும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கடுமையாக்கப்பட வேண்டும் என மத்திய மாநில அரசுகளை தமிழக வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்ரமராஜா சாடல்

தென்காசி மாவட்டம் ரயில்வே ரோடு பகுதியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் புதிய அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. இந்த திறப்பு விழாவில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்ரம ராஜா பங்கேற்றத்துடன் சங்கத்தின் கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார். தொடர்ந்து நிகழ்ச்சியில் செய்தியாளர்களை சந்தித்து விக்கிரமராஜா பேசுகையில்,

மத்திய அரசு பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி ரூபாய் 12 லட்சத்திற்கு கீழ் கிடையாது என்ற அறிவிப்பை தவிர வேற எந்த அறிவிப்பும் சாமானிய மக்களுக்கும் சாமானிய வியாபாரிகளுக்கும் ஏற்ற பட்ஜெட்டாக இல்லை எனவும் அந்த வகையில் இது கார்ப்பரேட் காரர்களுக்கான பட்ஜெடே தவிர மற்றவர்களுக்கு பிரயோஜனம் இல்லை என கூறினார்.

மேலும் மத்திய மாநில அரசுகள் இலவசங்களை வழங்குவது நோய் போலாகிவிட்டதாகவும்,அதனை விட்டுவிட்டு நாட்டிற்கான கடன்களை அடைக்கும் முயற்சிகள் ஈடுபட வேண்டும். மேலும் தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் சட்ட ஒழுங்கு கடுமையாக்கப்பட வேண்டும். கஞ்சா, புகையிலை விற்பனை செய்யக்கூடிய நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும் வகையில் சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும். அந்த வகையில் வெறும் சட்டமாக இல்லாமல் அனைத்தையும் நடைமுறைப்படுத்த அரசு முன்வர வேண்டும் எனவும் கூறினார்.

 

Tags : விக்ரமராஜா சாடல்

Share via

More stories