தமிழக முதலமைச்சர் விஜய் -குடியரசு தலைவர் திரௌபதி மு ர்முவை சந்தித்தார்.

by Admin / 10-06-2026 06:53:50pm
 தமிழக முதலமைச்சர் விஜய் -குடியரசு தலைவர் திரௌபதி மு ர்முவை சந்தித்தார்.

 

 

 தமிழக முதலமைச்சர் விஜய் தனி விமானத்தில் அரசு முறை பயணமாக மூன்று நாள் டெல்லி சென்றுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற உள்ள நிதி ஆயோக் ஆட்சி மன்ற கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். . தமிழ்நாட்டிற்கான நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து பேச உள்ளார்.இன்று அவர் குடியரசு தலைவர் திரௌபதி மு ர்முவை சந்தித்தார் பின்னர் துணை குடியரசு தலைவர் சி பி ராதாகிருஷ்ணனை சந்தித்து பேசினார். அதனைத் தொடர்ந்து சோனியா காந்தி இல்லத்திற்கு சென்று அவரையும் எதிர்க்கட்சித் தலைவரான ராகுலையும் சந்தித்து பேசினார். கடந்த முறை அவர் டெல்லி சென்ற பொழுது சோனியா காந்தியையும் ராகுல் காந்தியையும் சந்திப்பதாக இருந்தது. கடைசி நேரத்தில் அது மாற்றப்பட்டு தற்பொழுது அந்த நிகழ்வு நடந்திருக்கிறது.வரும் 12ஆம் தேதி டெல்லியில் இருந்து சென்னை திரும்ப உள்ளார்

 

Tags :

Share via
Logo