லஞ்சம் கேட்பவர்கள் மற்றும் வாங்குபவர்கள் மீது புகார் அளிப்பதற்காக தமிழக அரசு புதிய தொலைபேசி எண்ணை அறிவித்துள்ளது.
அரசு அலுவலகங்களில் லஞ்சத்தை ஒழிக்க வேண்டும் என்று தமிழக அரசு அதற்கான முயற்சியின் தொடக்கமாக லஞ்சம் கேட்பவர்கள் மற்றும் வாங்குபவர்கள் மீது புகார் அளிப்பதற்காக தமிழக அரசு புதிய தொலைபேசி எண்ணை அறிவித்துள்ளது. விண்ணில் பொதுமக்கள் லஞ்சத் தொடர்பான ஆதாரங்களை வாட்ஸப் மூலமாகவும் அனுப்பி புகார் தெரிவிக்கலாம் என்றும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்ககம் இவற்றை அறிந்து நடவடிக்கை மேற்கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
94 98 18 0936 என்கிற whatsapp எண்ணும்
044-22321090,
044-22321085
,044-22310989,
044-23342142 தொலைபேசி எண்களும் மின்னஞ்சல் வழியாக புகார் அளிக்க dvac@nic.in என்ற இணைய அஞ்சலும் நேரடியாக புகார் அளிக்க...
இயக்குனரகம், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை,
293, எம் கே .என் .சாலை, ஆலந்தூர்,
சென்னை-600016
தமிழக அரசு அலுவலகங்கள் உள்ளாட்சி அமைப்புகள் பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்திலும் லஞ்சம் கொடுப்பதும் வாங்குவதும் குற்றமாகும் என்ற விழிப்புணர்வு பலகையை புகார் எண்கள் தமிழ் மட்டும் ஆங்கிலத்தோடு கூடிய வாசகங்களில் கட்டாயம் காட்சிப்படுத்தப்பட வேண்டும் என்று தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
Tags :


















