பெருந்துறை தொகுதியில் எப்படியும் அதிமுக மீண்டும் வெற்றி பெற்றே தீர வேண்டும் -அதிமுகபொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி

by Admin / 16-07-2026 07:32:13am
 பெருந்துறை தொகுதியில் எப்படியும் அதிமுக மீண்டும் வெற்றி பெற்றே தீர வேண்டும் -அதிமுகபொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வியை சந்தித்ததை அடுத்து ஆறு எம்எல்ஏக்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர். இந்நிலையில், கட்சியை பலப்படுத்த வேண்டிய மேற்கடியான சூழலில் அதிமுக நிர்வாகிகளை அழைத்து பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசித்து வருகின்றார். பெருந்துறை தொகுதியில் அதிமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஜெயக்குமார் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு தமிழக வெற்றி கழகத்தில் இணைந்ததை தொடர்ந்து ஈரோடு அதிமுக புறநகர் மேற்கு மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பொதுச் செயலாளர் அதிமுக வென்ற பெருந்துறை தொகுதி கைவிட்டுப் போனதை அடுத்து வரும் காலங்களில் பெருந்துறை தொகுதியில் எப்படியும் அதிமுக மீண்டும் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு அவர் வேண்டுகோள் விடுத்ததோடு ஈரோடு மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளில் கட்சியின் பின்னடைவு மற்றும் தேர்தல் தோல்விக்கான கழல் நிலவுங்களை குறித்தும் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்ததோடு தொகுதி பக்கம் உள்ள மக்களின் நம்பிக்கையை மீண்டும் பெறவும் பூத் கமிட்டிகளை பலப்படுத்தவும் தகவல் தொழில்நுட்ப அணியை தீவிரமாக பயன்படுத்தவும் அறிவுறுத்தியதோடு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மாற்று கட்சிகளுக்கு மாறுவதை தடுத்து உள்ளூர் அளவில் ஒற்றுமையுடன் தேர்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் ஆலோசனை வழங்கினார்.

 

Tags :

Share via

More stories

Logo