கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா
தென் மாவட்டத்தின் ஆறுபடை கோயிலான கழுகுமலை கழுகாசல மூர்த்தி திருக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் விழாக்களில் கந்த சஷ்டி திருவிழாவும் முக்கியமான விழாவாக கொண்டாடப்படுகிறது இந்தாண்டு கந்த சஷ்டி திருவிழா கடந்த 2 ஆம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது விழாவின் 5-ம் நாளான இன்று 12 மணியளவில் வீரபாகு மூன்று
முறை தூது சென்ற பின்னரும் பணியாத சூரபத்மனின் தம்பி தாரகாசூரனை கழுகாசல மூர்த்தி வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவின் முக்கிய நாளான நாளை மாலை சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறும் பின்னர் இரவில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடைபெறும்.
Tags :