போலி ஆவணம் தயாரித்து நிலம் மோசடி

by Staff / 07-07-2023 03:19:06pm
போலி ஆவணம் தயாரித்து நிலம் மோசடி சென்னை பீச்ரோட்டை சேர்ந்தவர் விஜயபாஸ்கர் (வயது 45). இவருக்கு சேலம் பள்ளப்பட்டி அருகே உள்ள சின்னேரி வயக்காடு பகுதியில் 900 சதுர அடியில் பொதுவழி பாதை உள்ளது. இந்த நிலையில் விஜயகுமார் சேலம் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு 2-வது கோர்ட்டில் மனு ஒன்று தாக்கல் செய்தார்.அதில் சின்னேரி வயக்காடு பகுதியில் உள்ள தனது 900 சதுர அடி நிலத்தை தியாகராஜன், வைரவேல் ஆகியோர் போலியான ஆவணம் தயாரித்து மோசடி செய்துள்ளனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.இதுதொடர்பாக விசாரணை நடத்த நிலம் அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசாருக்கு கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழரசி, சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் ஆகியோர் விசாரணை நடத்தி போலி ஆவணம் தயாரித்து நிலம் மோசடி செய்த 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  
 

Tags :

Share via