இளைஞர் கொலை வழக்கில் மேலும் இருவர் கைது

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே இளைஞர் கொலை வழக்கில் தொடர்புடைய மேலும் 2 பேரைப் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். அய்யம்பேட்டை அருகே சூலமங்கலம் - பசுபதிகோயிலில் பிரிவு சாலை பகுதியில் உள்ள ஒரு மனைப்பிரிவில் அரியமங்கை கோயில் தெருவைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் விஜய் (22) செவ்வாய்க்கிழமை காலை பலத்த காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார் சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். இந்தக் கொலை தொடர்பாக, தஞ்சாவூர் அருகே சூரக்கோட்டையில் பதுங்கி இருந்த விக்னேஷ் (27), அருண் (34) ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்கள் அளித்த தகவலின்பேரில் அவர்கள் சூல மங்கலம் வடக்கு தெருவைச் சேர்ந்த சரவணன் என்கிற பாம்புசரவணன் (33) என்பதும், அதே தெருவைச் சேர்ந்த பரணிதரன் (32) ஆகியோர் விக்னேஸூடன் சேர்ந்து மது போதையில் விஜய்யை அடித்துக் கொன்றது தெரியவந்தது. இதனையடுத்து அய்யம்பேட்டை போலீஸார் 2 பேரையும் வழக்குப் பதிந்து கைது செய்தனர். பாம்பு சரவணன் சரித்திரப் பதிவேடு குற்றவாளி என்பது குறிப்பிடத்தக்கது.
Tags :