காசிவிஸ்வநாதர் ஆலயத்திற்கு கும்பாபிஷேக விழா 250 சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க தொடங்கிய யாகசாலை பூஜை.

by Editor / 04-04-2025 10:16:04pm
காசிவிஸ்வநாதர் ஆலயத்திற்கு கும்பாபிஷேக விழா 250 சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க தொடங்கிய யாகசாலை பூஜை.

தென்காசி மாவட்டம், தென்காசி நகர பகுதியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கு வருகின்ற 7-ஆம் தேதி கும்பாபிஷேக விழாவானது நடைபெற உள்ள நிலையில், கும்பாபிஷேக விழாவிற்கான யாகசாலை பூஜையானது தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது.

குறிப்பாக, தென்காசி காசி விஸ்வநாதர் ஆலயத்தில் புணரமைப்பு பணிகள் முழுமையாக நிறைவு பெறவில்லை எனக்கூறி தென்காசியை சேர்ந்த நம்பிராஜன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்த நிலையில், நேற்றைய தினம் கும்பாபிஷேக விழா நடத்துவதற்கு இடைக்காலத் தடையான விதிக்கப்பட்டது.

 இந்த நிலையில், கோவில் நிர்வாகம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், இன்று அதிகாலையில் 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு வீடியோ காலில் கோவிலில் செய்யப்பட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

 இந்த நிலையில், காசி விஸ்வநாதர் ஆலயத்தில் கும்பாபிஷேக விழா நடத்துவதற்கு நிஷா பானு, ஸ்ரீமதி அமர்வு இன்றைய தினம் அனுமதி வழங்கிய நிலையில், தற்போது யாகசாலை பூஜையானது வெகு விமர்சையாக தொடங்கியுள்ளது.

அதாவது, 250 சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க 91 ஹோம குண்டங்களில் தற்போது ஹோமங்கள் வளர்க்கப்பட்டு சிறப்பு யாகசால பூஜைகள் நடைபெற்று வரும் நிலையில், இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமியை தரிசனம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

 

Tags : காசிவிஸ்வநாதர் ஆலயத்திற்கு கும்பாபிஷேக விழா 250 சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க தொடங்கிய யாகசாலை பூஜை.

Share via