மூன்று மாநிலங்களில் பாறு கழுகுகளின் எண்ணிக்கை தற்போது 390 ஆக அதிகரிப்பு.

by Editor / 04-04-2025 10:10:29pm
மூன்று மாநிலங்களில் பாறு கழுகுகளின் எண்ணிக்கை தற்போது 390 ஆக அதிகரிப்பு.

2025ஆம் ஆண்டிற்கான ஒருங்கிணைந்த பாறு கழுகுகள் கணக்கெடுப்பின் படி, தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களில் மொத்தம் 390 பாறு கழுகுகள் உள்ளதாக மதிப்பிட்டுள்ளது. 2023-2024 ஆம் ஆண்டில் 320 ஆக இருந்த பாறு கழுகுகளின் எண்ணிக்கை தற்போது 390 ஆக அதிகரித்துள்ளது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 157 பாறு கழுகுகள் கண்டறியப்பட்டுள்ளன. முதுமலை புலிகள் காப்பகம் பாறு கழுகுகளின் இனப்பெருக்கத்திற்கு இன்றியமையாத இடமாக திகழ்வதாக தமிழ்நாடு வனத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

 

Tags : மூன்று மாநிலங்களில் பாறு கழுகுகளின் எண்ணிக்கை தற்போது 390 ஆக அதிகரிப்பு.

Share via