ரஷ்யா உக்ரேன் வெளியுறவு அமைச்சர்கள் இன்று நேரடி சந்திப்பு
ரஷ்ய மற்றும் உக்ரைன் வெளியுறவு அமைச்சர்கள் துருக்கியில் இன்று நேருக்கு நேரில் சந்தித்து பேச உள்ளனர்.
ரஷ்ய வெளியுறவு அமைச்சர் ஜெர்சி லாவ்ரோவ் உக்ரேன் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோவ் துருக்கியில் உள்ள அன்டாலியா நகரில் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்யா படையெடுப்பை தொடங்கிய பின்னர் ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே நடக்கும் முதல் உயர்மட்ட சந்திப்பு இதுவாகும்.
இந்த பேச்சுவார்த்தை மிக முக்கியமான ஒன்று என ரஷ்யா தெரிவித்துள்ள நிலையில் உக்ரைன் வெளியுறவு அமைச்சர் ரஷ்யாவின் நிலைப்பாடு குறித்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது
Tags :