by Staff /
05-07-2023
02:46:53pm
வாணியம்பாடியில் 13 வயது சிறுவன் தவறான சிகிச்சையால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியை சேர்ந்த சக்கரவர்த்தி என்பவரின் மகன் சூரிய பிரகாஷ். சிறுவனுக்கு காய்ச்சல் இருந்த நிலையில், கோபிநாத் என்னும் மருத்துவரிடம் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்துள்ளனர். இதனை தொடர்ந்து நேற்று காய்ச்சலுக்கு ஊசி போட்டதையடுத்து சிறுவன் உயிரிழந்தார். மேலும் கோபிநாத்தை போலீசார் கைது செய்து விசாரித்ததில் அவர் எம்பிபிஎஸ் படிக்காத போலி மருத்துவர் என தெரியவந்தது.
Tags :
Share via