by Staff /
05-07-2023
02:56:23pm
மத்திய அமைச்சரவை கூட்டத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி பங்கேற்கவில்லை. அவர் தெலுங்கானா பாஜக தலைவராக நேற்று நியமிக்கப்பட்டார். இந்த விவகாரம் குறித்து கிஷன் ரெட்டி இதுவரை பதிலளிக்கவில்லை. டெல்லியில் உள்ள தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் இருந்த போதிலும், அவர் அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்கவில்லை. கிஷன் ரெட்டியின் இல்லத்துக்கு அமைச்சக அதிகாரிகளும் வந்ததால், அவர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக யூகங்கள் எழுந்துள்ளன. மேலும், மத்திய அமைச்சரவை மாற்றம் காரணமாகவே அவருக்கு மாநில தலைவர் பதவி வழங்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Tags :
Share via