சர்வதேச அளவில் பிரதமர் மோடி டாப்

by Editor / 05-09-2021 12:26:08pm
சர்வதேச அளவில் பிரதமர் மோடி டாப்

பிரதமர் நரேந்திர மோடிக்கு 70 சதவிகித மக்கள் ஆதரவு உள்ளதாக தி மார்னிங் கன்சல்ட் நடத்திய ஆய்வில் கூறப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் உள்ள முக்கியமான 13 உலகத் தலைவர்களில் பிரதமர் மோடி தான் டாப்பில் உள்ளார்.

தி மார்னிங் கன்சல்ட் நிறுவனம் சர்வதேச அளவில் இருக்கும் முக்கிய தலைவர்களுக்கு மக்களிடம் எந்தளவுக்கு ஆதரவு உள்ளது என்பதைக் கண்டறியத் தொடர்ந்து சர்வே நடத்தும்.

மக்களிடையே நடத்தும் இந்த சர்வே-இன் அடிப்படையில், எத்தனை சதீவிகதம் பேரின் ஆதரவு மற்றும் எதிர்ப்பு ஒரு தலைவருக்கு உள்ளது என்பது குறித்த தகவல்களை தி மார்னிங் கன்சல்ட் நிறுவனம் வெளியிடும்.

அதன்படி செப்டம்பர் மாதத்திற்கான சர்வே முடிவுகள் இப்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் 70% மக்கள் ஆதரவுடன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி முதல் இடத்தில் உள்ளார். மோடிக்குப் பின், 64% மக்கள் ஆதரவுடன் மெக்சிகோ அதிபர் ஆண்ட்ரஸ் மானுவல் லோபஸ் ஒப்ரடோர் 2ஆவது இடத்திலும், இத்தாலிய பிரதமர் மரியோ டிராகி 63% ஆதரவுடன் 3ஆவது இடத்திலும் உள்ளனர். ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கல் ( 52%), அமெரிக்க அதிபர் ஜோ பைடன் (48% ), ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் (48% ), கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (45% ) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளனர்.

பிரதமர் மோடி 70%

மெக்சிகோ அதிபர் ஆண்ட்ரஸ் மானுவல் லோபஸ் ஒப்ரடோர் 64%

இத்தாலிய பிரதமர் மரியோ டிராகி 63%

ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கல் 52%

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் 48%

ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் 48%

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ 45%

பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ 39%

தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன் 38%

ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் 35%

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோன் 34%

ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகா 25%

பிரதமர் மோடி அதிகபட்சமாக 70% மக்கள் ஆதரவைக் கொண்டுள்ளார். பிரதமர் மோடிக்கு எதிராகக் கருத்து தெரிவித்தோரின் சதவிகிதமும் 25% ஆகக் குறைந்துள்ளதாக தி மார்னிங் கன்சல்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. நாட்டில் கடந்த மே மாதம் கொரோனா 2ஆம் அலை ஏற்பட்ட போது, பிரதமர் மோடிக்கு எதிரான மனநிலை மக்களிடையே அதிகரித்துள்ளது. நாட்டில் இப்போது கொரோனா பாதிப்பு நிலை மெல்ல முன்னேறி வரும் நிலையில், பிரதமர் மோடியின் ஆதரவும் மக்களிடையே அதிகரித்து வருவதாக தி மார்னிங் கன்சல்ட் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.அதிகபட்சமாக கொரோனா முதல் அலை ஏற்பட்ட சமயத்தில், கடந்த ஆண்டு மே மாதம் பிரதமர் மோடியின் ஆதரவு 84%ஆக அதிகரித்தது. முதல் அலையைச் சிறப்பாகக் கையாண்டு, வைரஸ் பாதிப்பு அதிகரிக்காமல் இருக்கப் பிரதமர் எடுத்த நடவடிக்கைகளைத் தொடர்ந்து, அவரது அவரது செல்வாக்கு அப்போது மக்களிடையே அதிகரித்தது. நாடு முழுவதும் உள்ள மக்களிடம் ஆன்லைன் மூலம் எடுக்கப்பட்ட சர்வே மூலம் இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாக தி மார்னிங் கன்சல்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via