காய்கறி வேனில் ரூ 5 லட்சம் மதிப்பிலான குட்கா போதை பொருட்கள்

by Staff / 18-11-2023 03:24:39pm
காய்கறி வேனில் ரூ 5 லட்சம் மதிப்பிலான குட்கா போதை பொருட்கள்

கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழக – கர்நாடக எல்லை வழியாக காய்கறி லோடு ஏற்றி வரும் வேனில் போதை தரக்கூடிய குட்கா புகையிலைப் பொருட்கள் கடத்தி வருவதாக ஆசனூர் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலையடுத்து காரப்பள்ளம் செக்போஸ்டில் தாளவாடி இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீஸார் வாகனசோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகரில் இருந்து காய்கறி ஏற்றி கொண்டு சிறுமுகை வழியாக மேட்டுபாளையம் சென்ற வேனை நிறுத்தி சோதனை செய்தனர். இருவரும் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் சந்தேகம் அடைந்த போலீஸார் வாகனத்தின் பின்புறம் சென்று பார்த்தனர். வேணில் இருந்த காய்கறி மூட்டைகளுக்கு அடியில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பான்பராக், ஹான்ஸ், குட்கா புகையிலைப் பொருட்களை இருந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து வேனை கைப்பற்றிய போலீசார் இருவரிடம் விசாரித்த போது மேட்டுபாளையம், காந்தி வீதியைச் சேர்ந்த சஜிஸ்(32), சிறுமுகையைச் சேர்ந்த பிரகாஷ் (40), என தெரியவந்தது. மேற்படி இருவரும் கடத்தி வந்த ஹான்ஸ், வி1புகையிலை, விமல் பான் மசாலா அடங்கிய மூட்டைகளின் எடை சுமார் 600 கிலோ என்பதும், அதன் மதிப்பு சுமார் ருபாய் 5 இலட்சம் பெருமானம் பெறும் எனவும் ஆசனூர் போலீசார் தெரிவித்தனர். இருரிடமும் போலீஸார் தொடர்ந்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories

Logo