டெல்லி மும்பை மின்மய நெடுஞ்சாலை அமைக்க திட்டம் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி

by Editor / 12-07-2022 01:15:08pm
டெல்லி மும்பை மின்மய  நெடுஞ்சாலை அமைக்க திட்டம் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி

டெல்லியிலிருந்து மும்பை வரை மின் மைய வாகனங்களுக்கான நெடுஞ்சாலை அமைக்க திட்டமிட்டு வருவதாக மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். எலக்ட்ரிக் நெடுஞ்சாலை என்பது பயணிக்கும் வாகனங்களுக்கும் மின் வினியோகம் செய்யும் பாதையாகும் டிராலி பேருந்து போல அதில் லாரிகளை கூட பயணிக்க செய்ய முடியும் என்று நிதின்கட்காரி  செய்தியாளர்களிடம் விளக்கினார். இரண்டரை லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள சுரங்கப் பாதைகள் அமைக்கப்பட்டு வருவதாகவும் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார் .அனைத்து மாவட்டங்களுக்கும் நான்குவழி சாலைகள் மூலம் எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

 

Tags :

Share via