ஆவினில் மருத்துவ குணம் கொண்ட பால் - அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்

by Staff / 01-09-2024 01:52:33pm
ஆவினில் மருத்துவ குணம் கொண்ட பால் - அமைச்சர் மனோ தங்கராஜ்  தகவல்

தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நேற்று  நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போதா அவர் கூறியதாவது: -  குமரி மாவட்டத்தில் நான்கு வழிச்சாலை பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. இரட்டை ரயில் பாதை பணிக்கு நிலம் கையகப்படுத்துவது தொடர்பாகவும் கலெக்டர் மற்றும் மாவட்ட வருவாய் அதிகாரிகளிடம் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 தமிழகத்தில் தற்போது ஆவின் மூலம் நாளொன்றுக்கு சுமார் 38 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு பால் உற்பத்தி மற்றும் கொள்முதலை நிலை நிறுத்துவதற்கு கால்நடை பெருக்கம் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆவின் பால் பொருட்கள் விற்பனையும் அதிகரிக்க புதிதாக டீலர்கள் நியமிப்பதோடு கூட்டுறவு பண்டகசாலைகள், ரேஷன் கடைகள் மூலமாகவும் விற்பனையாளர்கள் உரிமம் கொடுத்து விற்பனை அதிகரிக்க உள்ளோம்.

 ஆவினில் புதிய தயாரிப்புகள் குறித்து தீவிரமாக ஆலோசனை நடந்து வருகிறது. குறிப்பாக கொழுப்பு சத்து இல்லாமல் புரதச்சத்தை அதிகரித்து தயிர், பிளஸ்சி,  யோகர்ட் போன்றவை அறிமுகப்படுத்தப்படும்.   இது போக சில மருத்துவ குணம் கொண்ட அஸ்வகந்தா பால், மஞ்சள் - மிளகு பால் இது போன்றவற்றை விரைவில் அறிமுகப படுத்த தீவிரமாக பணிகள் நடந்து வருகிறது என கூறினார்.

 

Tags :

Share via