வால்பாறையில் கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை

by Staff / 01-09-2024 01:22:49pm
வால்பாறையில் கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை

கோவை மாவட்டம் வால்பாறையில் அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் பேராசிரியர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விழிப்புணர்வு நிகழ்ச்சிக்காக சமூக நலத்துறையில் இருந்து சென்ற அலுவலர்களிடம் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவிகள் புகார் அளித்தனர். இது குறித்து மகளிர் ஆணைய அதிகாரி கிருஷ்ணவேணி அளித்த புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via
Logo