முதலமைச்சர் அலுவலகம் நாமக்கல் கவிஞர் மாளிகையின் பத்தாவது தளத்திற்கு மாற்றப்பட உள்ளது.
சென்னை தலைமைச் செயலகத்தில் இயங்கி வந்த முதலமைச்சர் அலுவலகம் நாமக்கல் கவிஞர் மாளிகையின் பத்தாவது தளத்திற்கு மாற்றப்பட உள்ளதாக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இட நெருக்கடி காரணமாக இந்த மாற்றம் நிகழ உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. முதலமைச்சர் அறை முதலமைச்சரின் செயலாளர் மற்றும் ஆலோசர்களின் அறைகள் அனைத்தும் பத்தாவது தளத்திற்கு மாற்றப்பட உள்ளன. பத்தாவது தளத்தில் செயல்பட்டு வந்த பிற அரசு துறை அலுவலகங்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட உள்ளன அதன்படி பத்தாவது தளத்தில் இயங்கி வந்த செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறையின் பிரிவுகள், தமிழ் வளர்ச்சி, செய்தித்துறை இயக்குனர் அலுவலகம் மொழி பெயர்ப்பு துறை ஒரு லிட்டர் அலுவலகங்கள் சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கிற்கு மாற்றப்படுகின்றன. பத்தாவது தளத்தில் இருந்த சுற்றுலாத் துறையின் எழுது பொருள்கள் சேமிக்கப்படும் அறை 9-வது தளத்திற்கு மாற்றப்பட உள்ளது.
Tags :

















