சிவகாசியில் இன்று நிகழ்ந்த பட்டாசு வெடி விபத்தில் நால்வர் உயிரிழப்பு.
சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் இன்று நிகழ்ந்த பட்டாசு வெடி விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர். விவசாய நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிகத் தகரக் கொட்டகை முறையான அனுமதியின்றி சட்டவிரோதமாகப் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டிருந்தபோது ஏற்பட்ட உராய்வு காரணமாக இவ்விபத்து நேரிட்டுள்ளது. வெடி விபத்தின் சப்தம் 10 கி. மீ சுற்றளவுக்கு கேட்டுள்ளது.உயிரிழந்தவர்களின் உடல் பாகங்கள் சம்பவ இடத்திலிருந்து சிதறிக்கிடந்தன.இவ்விபத்தில் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. ராம்பிரகாஷ் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்ட ஆலை உரிமையாளர் இன்னாசி முத்து ,ஐயப்பராஜ்,பாண்டித்துரை காவல்துறை நடவடிக்கை சம்பவ இடத்திற்கு சிவகாசி கிழக்கு காவல் துறையினரும், தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினரும் விரைந்து வந்து உடல்களை மீட்டனர். இந்த சட்டவிரோத பட்டாசு தயாரிப்பு விவகாரம் தொடர்பாக செங்கமலப்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் தீவிர சோதனை நடத்தப்பட்டு, பட்டாசு மற்றும் மூலப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது .இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Tags :













.jpg)
.jpg)
.jpg)
.jpg)

