அதிமுக துணை பொதுச்செயலாளர் கேபி முனுசாமி பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர்கட்சிகளின் தலைவர்கள்களுடன் தேசிய ஜனநாயக கூட்டணி சந்திப்பு
தமிழகத்தில் வரும் ஆறாம் தேதி மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற உள்ள சூழ்நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வழிகாட்டுதலின்படி அதிமுக துணை பொதுச்செயலாளர் கேபி முனுசாமி பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் சென்னை கமலாலயத்தில் பாஜக மாநில தலைவர் நயினார்நாகேந்திரன் சந்தித்து அதிமுகவின் ஆதரவு கோரும் கடிதத்தை வழங்கி தங்கள் வேட்பாளர்களுக்கு முழு ஆதரவு நல்க கேட்டுக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து புதிய நீதி கட்சி தலைவர் ஏசி சண்முகத்தை அவரது இல்லத்தில் சந்தித்து இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டி கடிதத்தை அளித்தனர். அத்துடன் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாமக ஐஜேகே உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்களை சந்திக்க உள்ளதோடு அம்மா முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனையும் நேரில் சந்தித்து அதிமுக குழுவினர் ஆதரவு நல்கும்படி வேண்ட உள்ளனர்.
Tags :


















