இரண்டு ஆண்டுக்கு பிறகு இந்திய மாணவர்களுக்கு விசா வழங்க சீனா முடிவு

கொரோனா காரணமாக இரண்டு ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்ட மாணவர் விசாக்களை நாளை முதல் வழங்க சீனா அரசு முடிவு செய்துள்ளது. மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளைப் படித்து வந்த 23 ஆயிரம் இந்திய மாணவர்கள் கொரோனா காலத்தில் தாயகம் திரும்பினர். சீனா பல்கலைக்கழகங்களில் பயின்று பாதியில் திருப்பிய மாணவர்கள் புதிய மாணவர்கள் மட்டுமின்றி இந்திய தொழில் அதிபர்களுக்கும் சீனாவில் பணி புரிவோரின் குடும்பத்தினருக்கும் விசா வழங்கப்படும் என்று டெல்லியில் உள்ள சீன தூதரகம் அறிவித்துள்ளது. சீனாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் மீண்டும் சேர ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழைய இந்திய மாணவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். விமான சேவை மீண்டும் தொடங்க இரு நாடுகளுக்கும் இடையே வருவதாக இந்திய சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Tags :