போதையில் மகனை அடித்து கொன்ற தந்தை

by Staff / 28-06-2024 03:13:44pm
போதையில் மகனை அடித்து கொன்ற தந்தை

கன்னியாகுமரி கொல்லங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் ஜினு (36). இவர் கேரளாவில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் மேலாளராகப் பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார். அதன்பின்னர், மறுமணம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். ஆனால், அது கைகூடவில்லை. இதனால், விரக்தியடைந்த அவர் மதுபோதைக்கு அடிமையானார். நேற்று முன்தினம் இரவு மது போதையில் வீட்டிற்கு வந்த ஜினு தந்தை செல்வராஜுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒருகட்டத்தில் செல்வராஜ் ஆத்திரத்தில் மகன் என்றும் பாராமல் தேங்காய் உரிக்கும் கம்பியால் அடித்துக் கொலை செய்தார்

 

Tags :

Share via