சென்னையில் தீவிரவாதி கைது

by Staff / 28-06-2024 03:11:34pm
சென்னையில் தீவிரவாதி கைது

உபா சட்டத்தின் கீழ் தேடப்பட்டு வந்த மேற்கு வங்கத்தை சேர்ந்த அனோவர் என்ற தீவிரவாதி சென்னை கோயம்பேட்டில் கைது செய்யப்பட்டார். மேற்கு வங்கத்தை சேர்ந்த அனோவர் அன்சார் அல் இஸ்லாம் என்ற தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் என தகவல் வெளியானது. இந்நிலையில், கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்த அனோவரை கைது செய்துள்ள மேற்குவங்க காவல்துறையினர் அரசுக்கு எதிராக சட்டவிரோத செயலில் ஈடுபடுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர் .

 

Tags :

Share via