இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.

by Admin / 10-12-2025 10:39:49am
இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.

இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் கிழக்கு காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக டெல்டா மாவட்டங்கள் மற்றும் திருநெல்வேலி மேற்கு தொடர்ச்சி மலை உள்பட கடலூர மற்றும் தெற்கு தமிழகத்தின் சில பகுதிகளில் மிதமானது முதல் கன மழை பெய்யக்கூடும் என்றும் சென்னைவானிலை ஆய்வுமையம்  அறிவித்துள்ளது.

நாகப்பட்டினம், காரைக்கால் போன்ற பகுதிகளில் அதிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேடகமூட்டத்துடன் இருக்கும் என்றும் சில பகுதிகளில் ,குறிப்பாக ,பிற்பகல் அல்லது இரவில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வட தமிழ்நாட்டின் பிற பகுதிகள் உள் தமிழ்நாடு மற்றும் கொங்கு மாவட்ட பகுதிகளிலும் வரும் நாட்களில் பொதுவான வறண்ட வானிலை நிலவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.. டிசம்பர் 12ஆம் தேதி வாக்கில் உயர் அழுத்தமும் வறண்ட காற்றும் வீசும் என்றும் இது வேலூர் ,கோயம்புத்தூர் மற்றும் சேலம் போன்ற பல உள் மாவட்டங்களில் குளிரான சூழலை உருவாக்கும் என்று தெரிவித்துள்ளது. வங்காள விரிகுடாவில் நிலவும் வானிலை சூழல் காரணமாக மீனவர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இருப்பினும், இன்றைய தமிழக கடற்கரைக்கு குறிப்பிட்ட எந்த எச்சரிக்கையும் எடுக்கப்படவில்லை. 

 

Tags :

Share via