இன்று அ.தி.மு.க மாநில பொதுக்குழு செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது.
சென்னை வானரத்தில் உள்ள ஸ்ரீ வாரு மண்டபத்தில் இன்று அதிமுக
அவைத்தலைவர் தமிழ் மகன் உசேனுக்கு உடல்நல குறைவு ஏற்பட்டதன் காரணமாக தற்காலிக அவை தலைவராக கேபி முனுசாமி சபை முன்மொழிந்தது. அவர் இந்த நிகழ்ச்சியை நடத்திச் செல்வார் என்று பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மேடையில் அறிவித்தார்.அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் மாநில பொதுக்குழு செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது. ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மண்டபத்தில் உள்ள அமர்ந்திருக்க வெளியேயும் திரளான கூட்டம் உள்ளது. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மண்டபம் நோக்கி வந்து கொண்டிருக்கின்றார் மிகப்பெரிய அலங்கார வளைவுகளும் ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமி கட்டவுட் களும் வைக்கப்பட்டு இருக்கின்றன .கூட்டம் இன்னும் சிறிது நேரத்தில் ஆரம்பிக்க உள்ளது. இன்னும் நான்கு மாதங்களே தமிழக 2026 சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள சூழலில் பல்வேறு அரசியல் கட்சிகள் பரபரப்பாக தங்களுடைய தேர்தல் களவியூகங்களை வகுத்து வருகின்றன. அந்த வகையில் தமிழகம் முழுதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்த எடப்பாடி பழனிச்சாமி இன்று செயற்குழு பொதுக்குழுவில் சட்டமன்றத் தேர்தலுக்கான வியூகங்களை வகுப்பதற்கான சூழ்நிலையை உருவாக்கும் முகமாக இந்த பொதுக்குழு கூட்டம்16 தீர்மானங்களை நிறைவேற்றும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
Tags :


















