இருக்கையில் கட்டுக்கட்டாக பணம் - அபிஷேக் மனு சிங்வி மறுப்பு!
காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி. அபிஷேக் மனு சிங்விக்கு ஒதுக்கப்பட்ட இருக்கை எண் 222-லிருந்து கட்டு கட்டாக ரூபாய் நோட்டுகள் கண்டெடுக்கப்பட்டு இருப்பதாக அவைத்தலைவர் ஜக்தீப் தன்கர் அறிவித்துள்ளார்,இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பதாகவும் அவைத்தலைவர் ஜக்தீப் தன்கர் அறிவித்துள்ள நிலையில் இந்த தகவலுக்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.நாடாளுமன்ற கேண்டினில் பயன்படுத்துவதற்காக எப்போதும் ஒரே ஒரு 500 ரூபாய் நோட்டை மட்டுமே எடுத்துச் செல்வேன் சம்பவம் நடந்த அன்று கூட மதியம் 1:30 மணி வரை நாடாளுமன்ற கேன்டினில் தான் இருந்தேன்,இது போன்ற ஒரு விஷயத்தை முதல் முறையாக கேள்விப்படுவதாக காங்கிரஸ் எம்பி அபிஷேக் மனு ஷிங்வி விளக்கம்.
Tags : இருக்கையில் கட்டுக்கட்டாக பணம் - அபிஷேக் மனு சிங்வி மறுப்பு!