தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாகர்கோவில் - பெங்களூரு இடையே சிறப்பு ரயில் இயக்கம் - தெற்கு ரயில்வே

by Editor / 06-11-2023 11:52:46pm
 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாகர்கோவில் - பெங்களூரு இடையே சிறப்பு ரயில் இயக்கம் - தெற்கு ரயில்வே

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதாக நாகர்கோவில் - பெங்களூரு - நாகர்கோவில் இடையே சிறப்பு ரயிலை இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.

அதன்படி வருகிற நவ.7,14,21 (செவ்வாய்கிழமை) ஆகிய தேதிகளில் இரவு 7.35 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்படும் சிறப்பு ரயிலானது வள்ளியூர், கோவில்பட்டி,சாத்தூர்,விருதுநகர்,மதுரை, திண்டுக்கல், திருச்சி,கரூர்,நாமக்கல், சேலம் திருப்பத்தூர், கிருஷ்ணராஜபுரம் வழியாக மறுநாள் புதன்கிழமை மதியம் 12.30 மணிக்கு பெங்களூர் சென்றடையும்.

மறுமார்க்கம் வருகிற நவ.8,15,22 (புதன்கிழமை) ஆகிய தேதிகளில் மதியம் 2.15 மணிக்கு  பெங்களூரில் இருந்து புறப்படும் சிறப்பு ரயிலானது வியாழக்கிழமை காலை 6:10 மணிக்கு நாகர்கோவில் வந்தடையும் என தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags : தீபாவளி பண்டிகை

Share via