தென்காசி,தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை

by Editor / 06-11-2023 11:58:35pm
தென்காசி,தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை

தென்காசி,தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள அனைத்து  வட்டார பகுதியில் கடந்த சிலதினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இன்றும் காலை முதல் மாலை வரை வெயிலின் தாக்கம் குறைந்து காணப்பட்டது மட்டுமின்றி, வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலையில் அவ்வப்போது லேசான சாரல் மழையும் பெய்தது. இந் நிலையில் மாலையில் தொடங்கிய மழை இரவில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக வெளுத்து வாங்கியது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் மாவட்டத்திலுள்ள  இரயில்வே சுரங்க பாதைகளில்  தண்ணீர் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துடன் கடந்து சென்றனர். கடந்த மூன்று நாட்களாக தென்காசி மாவட்டத்தில் மிக கனமழை பதிவாகி வருகிறது. 

04-11-2023 சிவகிரி -120 மிமீ
05-11-2023 செங்கோட்டை -97 மிமீ
06-11-2023 தென்காசி -124 மிமீ
06-11-2023 ஆய்க்குடி -99 மிமீ

அக்டோபர் 1 முதல் இன்று வரையிலான வடகிழக்கு பருவமழை காலத்தில் தென்காசி 453 மிமீ மழையை பெற்றுள்ளது

 

Tags : தென்காசி மாவட்டம் 453 மிமீ மழையை பெற்றுள்ளது.

Share via

More stories

Logo