ஜனாதிபதி மாளிகை அருகே துப்பாக்கியுடன் வந்த பெண்.

by Staff / 25-10-2022 04:31:58pm
ஜனாதிபதி மாளிகை அருகே துப்பாக்கியுடன் வந்த பெண்.

இந்தோனேசியாவின் ஜகார்த்தா நகரில் ஜனாதிபதி மாளிகை அருகே துப்பாக்கியுடன் சென்ற பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது. உள்ளூர் நேரப்படி இன்று காலை 7 மணியளவில் அந்தப் பெண் ஜனாதிபதி மாளிகையின் காம்பவுண்ட் அருகே வந்தபோது அவரை அதிகாரிகள் சந்தேகத்தின்பேரில் கைது செய்தனர். அந்த பெண் ஜனாதிபதி மாளிகையில் நுழையவில்லை என்றும், அவர் துப்பாக்கியுடன் வந்தபோது ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி ஜோகோ விடோடோ இல்லை என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories